நில்வலா ஆற்றில் அக்குரெஸ்ஸ, மாரம்ப காலி, வேல் பாலத்திற்கு அருகில் இன்று (28) பிற்பகல் மனித கால் ஒன்று மிதந்து கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அக்குரஸ்ஸ மரண விசாரணை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ், அக்குரஸ்ஸ பொலிஸார் மனித இடது காலை எடுத்து பரிசோதனைக்காக மாத்தறை பொது மருத்துவமனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தனர்.
இதற்கிடையில், குறித்த பகுதியைச் சேர்ந்த 76 வயதுடைய ஒருவர் கடந்த மூன்று நாட்களாகக் காணாமல் போயிருந்த நிலையில், குறித்த கால் அவருடையதாக என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
மேலும், இது ஒரு கொலையா அல்லது முதலையின் பிடியில் சிக்கி ஒருவரின் இடது கால் ஆற்றில் மிதந்ததா என்பதை அறிய பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
மூன்று நாட்களுக்கு முன்பு காணாமல் போனவரின் கால் அது என்று காணாமல் போனவரின் சகோதரன் தெரிவித்துள்ளார்.