புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் கசிப்பு விற்பனை செய்த இரண்டு இளைஞர்கள் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டு புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் விற்பனை செய்யப்படுவதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர்.ஹேரத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிளை மறித்து சோதனை செய்த போது இளைஞர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசுவமடு பகுதியை சேர்ந்த 21, 26 வயதுடைய இரு இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 55 லீற்றர் கசிப்பு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணையின் பின்னர் சனிக்கிழமை (01) முல்லைத்தீவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.