யாழி்ல் பாடசாலை, வங்கி மற்றும் பொலிஸ் நிலையங்களுக்கு சென்று வீம்புக்கு வம்பெழுத்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்படும் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
குறித்த நபர் கடந்த சில தினங்களின் முன் வரணி மகாவித்தியாலய விளையாட்டுப் போட்டியின் போது பொலிசாருடன் சண்டையிட்டு அதனை லைவ்வாக ரிக்ரொக்கில் பதிவிட்ட காரணத்தால் கைது செய்யப்பட்டு 18/03/2025 வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகின்றது.
விளையாட்டு போட்டியன்று போலீஸாருடன் குறித்த நபர் நடந்துகொண்ட முறை தவறானது என சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
குறித்த நபர் பிரித்தானிய பிரஜை என்றும் கூறப்படுகின்றது. குறித்த வீடியோக்கள் கீழே இணைக்கப்படுள்ளது.