இந்தியாவின் ஒடிசா மாநிலம் ஜெகத்சிங்பூர் மாவட்டம் ஜெயபடாசெதி ஷகி பகுதிyஇல் வசித்து வருபவர் 65 வயது பிரசாந்த் கலியா. இவரது மனைவி 62 வயது கனக்லதா. இவர்களுக்கு 25 வயதில் ரோஸ்லின் என்ற மகளும், 21 வயதில் சூர்யகாந்த் என்ற மகனும் இருந்தனர். சூர்யகாந்த் கல்லூரி பயின்று வந்தார்.
சூர்யகாந்த் செல்போனில் ஆன்லைன் கேமிற்கு அடிமையாக இருந்துள்ளார். தொடர்ந்து செல்போனில் ஆன்லைன் கேம் விளையாடி வந்ததால் அவரால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. அவரது பெற்றோரும், அக்காவும் செல்போனில் கேம் விளையாடுவதை கண்டித்துள்ளனர். இந்நிலையில், செல்போனில் கேம் விளையாடுவதை கண்டித்ததால் ஆத்திரமடைந்த சூர்யகாந்த் இன்று அதிகாலை 3 மணிக்கு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தந்தை பிரசாந்த், தாயார் கனக்லதா, அக்கா ரோஸ்லின் ஆகிய 3 பேரையும் கல்லால் அடித்துக் கொலை செய்தார்.
3 பேரையும் கல்லால் அடித்துக்கொன்ற பிறகு சூர்யகாந்த் அருகில் உள்ள கிராமத்தில் தலைமறைவாகி விட்டதாகத் தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் 3 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கிராமத்தில் பதுங்கி இருந்த சூர்யகாந்தையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்தி சூரியகாந்திடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.