முக்கொலையுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது..!

0
91

மித்தெனிய பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி இரவு மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன் மற்றும் மகள் கொல்லப்பட்டனர்.

மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாதோரால், இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது.

இன்று கைது செய்யப்பட்ட சந்தேக நபருடன், இந்தக் குற்றச் செயல் தொடர்பாக இதுவரை 08 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மித்தெனிய பொலிஸார் மற்றும் தங்காலை குற்றவியல் பணியகத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும், இராணுவத்திலிருந்து தப்பியோடி பின்னர் சட்டப்பூர்வமாக வெளியேறிய இரண்டு முன்னாள் இராணுவ உறுப்பினர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here