தமிழன் என்பதற்காக நீதிபதி இளஞ்செழியன் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி.. பாராளுமன்றத்தில் அர்ச்சுனா.. வீடியோ

0
114

நீதிபதி இளஞ்செழியன் ஒரு தமிழன் என்ற காரணத்திற்காகவே அவருக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் இன்றைய (05.03.2024) அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“ஒரு நாட்டின் நீதிமன்றம் சுயமாக இயங்காவிடின் அந்த நாட்டில் நீதி ஒரு காலமும் நிலைநாட்டப்படாது.

வடக்கு மக்களின் கடவுளாக வர்ணிக்கப்படும் நீதிபதி இளஞ்செழியன் ஒரு தமிழன் என்ற காரணத்திற்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அவருக்கு பதவி உயர்வை வழங்க மறுத்தது.

இதேவேளை, மக்களை பாதுகாப்போம் எனக் கூறி ஆட்சியை பிடித்துக்கொண்டு வடக்கு கிழக்கில் போதைவஸ்து அதிகரித்திருக்கின்றது என அரசாங்கம் கூறுவது வேடிக்கையானது” எனத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here