கொழும்பில் 2 வயது குழந்தை கொ-லை.. கணவன் மனைவிக்கு மரண தண்டனை.!

0
111

தத்தெடுத்த குழந்தையை சித்திரவதைக்குட்படுத்தி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தம்பதிக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (06) உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது…

கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி தத்தெடுக்கப்பட்ட 02 வயதுடைய குழந்தை ஒன்று சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து குழந்தையை தத்தெடுத்ததாக கூறப்படும் சந்தேக நபர்களான தம்பதிக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு கொழும்பு மேல் நீதவான் சுஜீவ நிஷாங்க முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, சட்ட வைத்தியரால் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்ட வைத்திய அறிக்கையில், உயிரிழந்த குழந்தையின் உடலில் சுமார் 90 காயங்கள் காணப்பட்டதாகவும் குழந்தை கடும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் வைத்திய பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சந்தேக நபர்களான தம்பதிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட சாட்சிகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டதையடுத்து கொழும்பு மேல் நீதவான் சுஜீவ நிஷாங்கவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here