நீர் நிரம்பிய குழியில் தவறி விழுந்து ஒரு வயது குழந்தை உயிரிழப்பு..!

0
133

ஆரச்சிகட்டுவ, வைரங்கட்டுவ பகுதியில் கட்டுமானப் பணி நடைபெற்று வரும் பாதுகாப்பற்ற கழிப்பறை குழியில் விழுந்து 1 வயது குழந்தை உயிரிழந்துள்ளதாக ஆரச்சிகட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.

ஆராச்சிகட்டுவ, வைரங்கட்டுவ பகுதியைச் சேர்ந்த தெனஹண்டிகே வினுகி ஹன்சிமா என்ற பெண் குழந்தையே கழிப்பறை குழியில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

வியாழக்கிழமை மாலை (06) உயிரிழந்த குழந்தையின் தந்தை வீட்டில் இல்லை, மேலும் அவரது தாயார் தேவைக்காக வீட்டை விட்டு வெளியே சென்றிருந்தபோது, ​​அவரது மூத்த சகோதரி மற்றும் சகோதரர், சிறுமியுடன் விளையாடிக் கொண்டிருந்தனர்.

சுமார் 10 நிமிடங்களில் வீடு திரும்பியபோது, ​​தனது மகள் மற்ற குழந்தைகளுடன் இல்லை என்றும், நீர்த்தேக்கத்தில் விழுந்து, அதில் நிரம்பியிருந்த தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்ததாகவும், தாயார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். குழந்தையை வெளியே இழுத்து, அண்டைய வீட்டாரின் உதவியுடன் உடனடியாக கிராமிய மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் முல்லைத்தீவில் பாட்டியின் மாத்திரைகளை அருந்தி குழந்தை ஒன்று உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here