யாழில் பல்கலைக்கழக மாணவனுடன் தவறான உறவு; பெண் அரச ஊழியர் த.ற்.கொ.லை முயற்சி..!

0
41

யாழ் கொக்குவில் பகுதியில் 36 வயதான இரு பிள்ளைகளின் தாயார் கிணற்றில் பாய்ந்த நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளது.

யாழில் உள்ள அரச நிறுவனம் ஒன்றில் உயர் பதவி வகிக்கும் இப் பெண்ணின் அயல் வீட்டில் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தங்கியிருந்து கற்று வந்துள்ளார்.

குறித்த மாணவனுக்கும் பெண்ணுக்கும் இடையில் தவறான தொடர்பு இருந்து வந்துள்ளது. பெண்ணின் கணவர் வெளி மாவட்டம் ஒன்றில் தனியார் துறையில் உயர் பதவியில் உள்ளதாகத் தெரிய வருகின்றது.

பெண்ணுக்கும் கணவருக்கும் இடையில் சில காலமாக முரன்பாடுகள் வலுத்த நிலையில் கணவன் வீட்டுக்கு வருவதை தவிா்த்திருந்தார்.

இந் நிலையில் குறித்த மருத்துவபீட மாணவன் பெண்ணுடன் தவறான தொடர்புகளைப் பேணி அதனை வீடியோவாக எடுத்து வந்துள்ளார், குறித்த மாணவன் போதைக்கு அடிமையாகி பெண்ணிடம் பணம் கேட்டு வற்புறுத்தி வந்ததாகத் தெரிய வருகின்றது.

இதன் காரணமாக பெண் அவனை விட்டு விலகியதுடன் மாணவன் தங்கியிருந்த வீட்டுச் சொந்தக்காரரான வயதான தம்பதிகளிடமும் மாணவன் தொடர்பாக கூறி அவனை அங்கிருந்து அகற்ற முயன்றுள்ளார்.

இதனால் கடுப்பான மாணவன் தான் உறவு கொள்ளும் போது எடுத்து வைத்திருந்த வீடியோக்களை காட்டி பெண்ணை அச்சுறுத்தி நகைகள் மற்றும் பணம் என்பவற்றை தொடர்ச்சியாக பறித்து வந்ததாகத் தெரிய வருகின்றது.

இதனையடுத்து தனது பிள்ளைகளை பாடசாலைக்கு விட்டுவிட்டு அயல்வீட்டு தம்பதிகளிடம் குறித்த மாணவன் வீடியோ காட்டி அச்சுறுத்துவதை தெரிவித்த பின் வீட்டுக்கு சென்று கிணற்றில் பாய்ந்ததாகத் தெரிய வருகின்றது.

கிணற்றில் பாய்ந்த சத்தத்தை கேட்ட அயல் வீட்டு தம்பதிகள் குக்குரல் இட்டு தெருவில் சென்றவர்களை அழைத்து குடும்பப் பெண்ணை காப்பாற்றியுள்ளார்கள்.

இந் நிலையில் அயல்வீட்டு தம்பதிகளின் தகவல்களை அடுத்து மருத்துவபீட மாணவன் கடுமையாக அங்கு நின்றவர்களால் தாக்கப்பட்டதாகத் தெரிய வருகின்றது. இச் சம்பவம் நேற்று முன்தினம் காலை இடம் பெற்றுள்ளது.

குடும்பம் என்ற வரையறைக்குள் கட்டுப்பாட்டுடன் வாழாது அற்ப இச்சைக்காக தவறான வழியில் சென்று தவறான நபர்களின் கைகளில் சிக்குண்டு தமது வாழ்க்கையை தினம் தினம் தொலைத்த பல கதைகளை கேட்டும் எம்மவர்கள் திருந்துவதாகத் தெரியவில்லை. (JVP)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here