பயங்கரம்.. 3வது திருமணம்..? காதலனுடன் சேர்ந்து 2வது கணவரை போட்டுத்தள்ளிய இளம்பெண்.!

0
69

இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசித்து வருபவர்கள் காதலர்களான ஜனார்த்தனன் (22), எலன்மேரி (21) . இருவரும் பிப்ரவரி 28ம் தேதிவேளாங்கண்ணிக்கு வருகை தந்துள்ளனர். இங்கு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ள இருவரும் மறுநாள் வேளாங்கண்ணி கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வேளாங்கண்ணி ரயில் நிலையம் அருகில் உள்ள கருவேலங்காட்டில் ஜனார்த்தனன் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாக வேளாங்கண்ணி போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, போலீஸார் ஜனார்த்தனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத்தொடர்ந்து, ஜனார்த்தனின் மனைவி எலன்மேரியிடம் காவல் ஆய்வாளர் தீவிரவிசாரணை நடத்தினார். அப்போது, “பெங்களூருவைச் சேர்ந்த எனது கணவர் ஜனார்த்தனின் நண்பர்கள் சாகர், ஜீவா இருவரும் எங்களின் அறையில் வந்து தங்கியிருந்தனர். அவர்களுடன் வெளியே சென்ற எனது கணவரை அவர்கள் இருவரும் கொலை செய்துவிட்டதாக என்னிடம் வந்து சொல்லிவிட்டு, தப்பிச் சென்றுவிட்டனர்” என எலன்மேரி வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து, பெங்களூருவுக்கு தப்பிச் செல்ல முயன்ற சாகர், ஜீவா இருவரையும் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் போலீஸார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் ”ஒரே கல்லூரியில் படித்த ஜீவாவும், எலன்மேரியும் காதலித்து வந்தனர். அதற்கு ஜனார்த்தனன் இடையூறாக இருப்பார் எனக் கருதி, அவரை திட்டமிட்டு கொலை செய்ததாக கூறினர். எலன்மேரியையும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் எலன்மேரிக்கு ஏற்கனவே 2 ஆண்டுகளுக்கு முன்பு தருமபுரியில் முதல் திருமணம் நடந்துள்ளதும், 2-வதாக ஜனார்த்தனை திருமணம் செய்ததும், அவரையும் பிடிக்காமல் ஜீவாவை 3-வதாக திருமணம் செய்ய நினைத்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக பரபரப்பு தகவல் அளித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here