முல்லைத்தீவு – மல்லாவி பிரதேசத்தினை சேர்ந்த இளைஞன் ஒருவர் வெளிநாடு செல்ல காத்திருந்த நிலையில் வவுனிக்குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட நிலையில் இளைஞனின் படுகொலைக்கு நீதி வேண்டி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்ட்டது.
குறித்த போராட்டமானது இன்றைய தினம் (14.03.25)) மல்லாவி பொலிஸ் நிலையம் முன்பாக பல்வேறு சுலோகங்களை ஏந்திய வண்ணம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதுடன் குறித்த பகுதியில் அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
குறிப்பாக, பொலிஸாரின் தன்னிச்சையான செயற்பாடுகளே இந்த விசாரணையின் பின்னணியில் இருப்பதாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் இளைஞரின் மரணம் தொடர்பாக விசாரணைகளை தொடர்ந்து நடத்துவதாகவும் இந்த விசாரணைகளுக்காக விசேட குழு ஒன்றை நியமிப்பதாகவும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்ததையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.
இதேவேளை போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் உதவி பொலிஸ் அத்தியட்சகரிடம் கையளித்தனர்.
சம்பவம் தொடர்பான செய்தி… – (29.07.2024)
முல்லைத்தீவு – மல்லவி பிரதேசத்தினை சேர்ந்த இளைஞன் ஒருவர் வெளிநாடு செல்ல காத்திருந்த நிலையில் வவுனிக்குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டர். இந்த சம்பவம் 30.07.2024 அன்று இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு – யோகபுரம் மல்லாவி பகுதியினை 27 வயது ஆனந்தரசா சஜீவன் என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
29.07.2024 அன்று பிற்பகல் 20 இலட்சம் பணத்தினை கொண்டு யோகபுரத்தில் இருந்து பாண்டியன் குளத்திற்கு சென்ற இளைஞன் இரவு 8.40 வரை நண்பர்களுடன் தொலைபேசியில் உரையாடிய நபர் அதன் பின்னர் அவரது தொலைபேசி வேலை செய்யவில்லை.
குறித்த இளைஞனின் தொடர்பு கிடைக்காத நிலையில் அவனது நண்பர்கள் தேடியபோது அன்று அதிகாலை 3.00 மணியளவில் பாண்டியன்குளம் குளக்கரையில் மோட்டார் சைக்கில் இனம் காணப்பட்டுள்ளதை தொடர்ந்து தேடியும் நபரை காணவில்லை வவுனிக்குளத்தின் மூன்றாது நீர் சுருங்கையில் (நீர் கொட்டு) பகுதியில் உடலம் கிடப்பது இனம்காணப்பட்டு பிரதேச வாசிகளால் உடலம் மீட்கப்பட்டு வெளியில் எடுக்கப்பட்டது.
குறித்த இளைஞன் கனடாவிற்கு செல்வதற்காக தயாரான நிலையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.