இதற்குத்தான் ஒரு பெண்ணின் நடத்தை குறித்து பாராளுமன்றத்தில் பேசினேன்.. அர்ச்சுனா எம்.பி.!

0
37

சமூகப் பொறுப்பின் அடிப்படையிலேயே ஒரு பெண்ணின் நடத்தை குறித்து பாராளுமன்றத்தில் பேசியதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உரையின் போது பயன்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய சொல்லாடல் குறித்து ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர்…

குறித்த விவகாரம் தொடர்பான ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன. இந்த விடயம் சம்பந்தமாக அவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்கலாம். ஒரு இளம் சமுதாயம் அழியும் வகையிலான ஓர் ஆதரன் என்னிடம் வந்த காரணத்தினால் ஒரு சமூகப் பொறுப்புடனேயே இதனை பாராளுமன்றில் பேசினேன் எனத் தெரிவித்தார்.

மேலும் சட்டத்தரணி சுவஸ்திகாவை விமர்சித்தமை தொடர்பாக கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, நான் சுவஸ்திகா குறித்து இதுவரை எந்தக் கருத்தும் பாராளுமன்றில் தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக பாராளுமன்றில் உரையாற்றிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க, குறித்த விடயத்தை ஹன்சாட்டில் இருந்து நீக்குமாறு பேசியுள்ளார்.

நான் குறித்த நபர் தொடர்பாக பாராளுமன்றத்தில் பேசவில்லை எனவே நான் இல்லாத சந்தர்ப்பத்தில் வேறு யாரேனும் பாராளுமன்றில் அவர் குறித்து பேசியிருக்கலாம் என நினைக்கிறேன். தவிர சட்டத்தரணி சுவஸ்திகா மீது தனிப்பட்ட எந்தக் கோபமும் இல்லை எனத் தெரிவித்தார். (video-fb)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here