கண்ணீரில் காசா.. நோன்பு நேரத்தில் இஸ்ரேல் கொடூர தாக்குதல்.. 413 பேர் உயிரிழப்பு..!

0
21

காசா மீது இஸ்ரேல் நடத்திய பயங்கர தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 413 ஆக உயர்ந்துள்ளது.

பணய கைதிகளை விடுவிக்கும் விவகாரத்தில் ஹமாஸ் இயக்கத்தினர் கெடுபிடி காட்டியதை அடுத்து, காசா பகுதிகள் மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல் நடத்தியது.

காசா பகுதியில் வாழும் பாலஸ்தீன மக்கள், ரம்ஜான் நோன்பு இருக்கின்றனர். இந்நிலையில், அங்கு இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

தாக்குதல் நடத்த ஆயத்தமான பயங்கரவாதிகளை குறி வைத்து இந்த தாக்குதலை நடைபெற்றதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. காசா மற்றும் லெபனானில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள நிலையில், தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வாரங்களாக காசா பகுதிக்குள் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் செல்வதை இஸ்ரேல் முழுமையாக தடை செய்துள்ளது.

தற்போது, காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 413 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படாததால், தாக்குதல் நடத்த உத்தரவிட்டதாக பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here