32 வயதிலேயே விழுந்த வழுக்கை.. மனைவி கேலி செய்ததால் கணவன் எடுத்த முடிவு.!

0
12

இந்தியாவின் கர்நாடகாவில் தலையில் முடியில்லை என மனைவி கேலி செய்ததால், மன உளைச்சலில் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகரைச் சேர்ந்தவர் பரசுராம் மூர்த்தி. 32 வயதான இவருக்கு, 27 வயதான மமதா என்ற பெண்ணுடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இளம் தம்பதி மகிழ்ச்சியாக தங்களது இல்லற வாழ்க்கையை தொடங்கிய நிலையில், நாளடைவில் பரசுராம் மூர்த்தியின் தலைமுடி கொட்ட ஆரம்பித்துள்ளது. தொடர்ந்து முடி கொட்டி தலையில் வழுக்கை விழுந்ததால் தம்பதி இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது.

அதே வேளையில் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்த மமதா, அடிக்கடி ரீல்ஸ் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். வீடியோவில் தன்னை அழகாக காட்டிக் கொள்வதற்காக நகைகள் மற்றும் புத்தாடைகள் கேட்டு கணவரை நச்சரித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, புதிய வீடு கட்ட வேண்டும் என்றும் நிர்பந்தித்துள்ளார். பேருந்து ஓட்டுநரான பரசுராமுக்கு போதிய வருவாய் இல்லாததால், மனைவியின் எதிர்பார்ப்பை உடனே நிறைவேற்ற முடியாத நிலையில் இருந்துள்ளார்.

இந்நிலையில், வழுக்கைத் தலையுடன் இருந்த கணவரை கேலி செய்த மனைவி, தனக்கு நீ பொருத்தமற்றவன் என்று அடிக்கடி குத்திக்காட்டியதாக தெரிகிறது.

மேலும், மற்றவர்கள் முன்னிலையில் கணவரை மட்டம் தட்டி பேசியுள்ளார். அதுமட்டுமின்றி தாலியை கழற்றி விட்டு, சமூக வலைதளங்களில் தனது போட்டோக்களையும், வீடியோக்களையும் பதிவிட்டுள்ளார். ஒரு கட்டத்தில் பரசுராமை அடியோடு வெறுத்த மமதா, கணவர் மீது பொய்யான வரதட்சணை புகார் கொடுத்துள்ளார். இந்த வழக்கில் ஒன்றரை மாத சிறை வாசத்துக்குப் பின் அண்மையில் ஜாமினில் வெளியே வந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, அதன் பின்னரும் மனைவியால், கேலிக்கும், கிண்டலுக்கும் பரசுராம மூர்த்தி ஆளாகியுள்ளார். தொடர்ந்து மனைவியின் தொந்தரவால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான பரசுராம் மூர்த்தி, கடிதம் எழுதி வைத்துவிட்டு, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சாம்ராஜ் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலையில் முடியில்லை என தொடர்ந்து மனைவி கேலி செய்து மட்டம் தட்டியதால், மன உளைச்சலுக்கு ஆளான கணவர் கடிதம் எழுதிவைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சாம்ராஜ் நகரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here