மின்சார கம்பியில் விழுந்த விமானி.. அதிர்ச்சி வீடியோ.!

0
61

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான தாக்குதல் பயிற்சி விமானம் ஒன்று இன்று (21) காலை வாரியபொல, மினுவன்கெட்டே பகுதியில் விழுந்து தீப்பற்றி எரிந்தது.

விபத்து நடந்த போது, விமானத்தில் இருந்த இரண்டு விமானிகள் பாதுகாப்பாக வெளியேறியிருந்தனர். ஆனால், ஒரு விமானி தரையிறங்கும் போது சிறிய காயங்களுக்கு உள்ளானார்.

பிரதான பயிற்சி ஆலோசகர் தரையிறங்கும் போது மின்சார கம்பியில் சிக்கியதால் அவருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன.

பின்னர், பிரதேசவாசிகள் இணைந்து சுவசெரிய நோயாளர் காவு வண்டி ஊடாக இரண்டு விமான அதிகாரிகளையும் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தனர்.

விமானத்தில் இருந்து வெளியேறிய இரு விமானிகளும் பாராசூட் உதவியுடன் மினுவன்கெட்டே பகுதிக்கு அருகிலுள்ள அவுலேகம, சுந்தரகம வித்தியாலயத்திற்கு அருகில் தரையிறங்கினர்.

எனினும், விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

விபத்துக்குள்ளானது இலங்கை விமானப்படைக்கு சொந்தமான K-8 வகையைச் சேர்ந்த உயர்நிலை பயிற்சிக்காக பயன்படுத்தப்படும் தாக்குதல் விமானமாகும்.

பிரதான பயிற்சி ஆலோசகர் மற்றும் ஒரு பயிற்சி விமானியுடன் இந்த விமானம் பயிற்சிற்காக இன்று காலை 7:27 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.

விமானம் காலை 7:55 மணியளவில் வாரியபொல பகுதிக்கு மேலே பறந்து கொண்டிருக்கும் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

தலைகீழாக புரண்டு விபத்துக்குள்ளான விமானம் – வீடியோ

விழுந்து எரியும் காட்சி –

மின்சார கம்பியின் மேல் விழுந்த விமானி.. காப்பாற்றிய பொதுமக்கள் – அதிர்ச்சி வீடியோ.!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here