யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது வெப்பமான வானிலை அதிகரித்து வரும் நிலையில் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் என்.சூரியராஜா குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், உடல் வெப்பத்தைத் தணிக்கக் கூடிய நீராகாரங்களை அதிகமாக உட்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மற்றும் குழந்தைகள் பெரியவர்கள் பாதுகாப்பாக இருப்பதுடன், வெயிலில் அதிக நேரம் இருக்க வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.