பவுசர் கவிழ்ந்ததில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு.!

0
88

கலவான – மதுகம வீதியில் அம்பலமஹேன பகுதியில் புதன்கிழமை (26) இரவு ரப்பர் லேடக்ஸ் பவுசர் கவிழ்ந்ததில் சாரதி மற்றும் உதவியாளர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கலவான பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் பால் லாரியின் ஓட்டுநராக இருந்த கல்னேவ ரம்புக்கன பகுதியைச் சேர்ந்த ஜனக பாதும் குமார (வயது-27) மற்றும் சாரதியின் உதவியாளராக இருந்த புளத்சிங்கள பகுதியைச் சேர்ந்த பதுடிகே பிரியந்த (வயது-36) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புளத்சிங்கள பகுதியில் உள்ள ஒரு ரப்பர் தொழிற்சாலையின் ரப்பர் லேடெக்ஸ் பவுசர் விபத்தில் சிக்கியுள்ளது. இரத்தினபுரி பகுதியில் ரப்பர் லேடெக்ஸை சேகரித்து திரும்பிக் கொண்டிருந்தபோது பவுசர் விபத்துக்குள்ளானதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். (Photos-FB)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here