மின்னல் தாக்கியதில் மாணவன் உயிரிழப்பு.!

0
113

கேகாலை, ரன்வல கொனமடஹேன பிரதேசத்தில் மின்னல் தாக்கி க.பொ.த சாதாரண தர மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர்.

ரன்வல கொனமடஹேன பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய பாடசாலை மாணவனே உயிரிழந்துள்ளார்.

இந்த மாணவன் கடந்த செவ்வாய்க்கிழமை (25) க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிவிட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ள நிலையில், தனது கையடக்கத் தொலைபேசியை சார்ஜ் போட்டுக்கொண்டே தொலைபேசி அழைப்பில் உரையாடிக் கொண்டிருந்துள்ளார்.

இதன்போது இந்த மாணவன் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த மாணவனின் சடலம் கேகாலை வைத்தியசாலையில் கடந்த புதன்கிழமை (26) பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here