சோகத்தை ஏற்படுத்திய குருக்களின் உயிரிழப்பு..!

0
148

விஷயந்து தீண்டியதில் பிரம்மஸ்ரீ.கௌரிகணேசக் குருக்கள் மகனான கௌரிதாச சர்மா உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவிழாக்கள், கும்பாவிஷேகம் போன்ற நேரங்களின் முல்லைத்தீவில் பல கோயில்களில் கௌரிதாச சர்மா குருக்களை பார்த்திருக்க முடியும்.

புதுக்குடியிருப்பு கந்தசாமி கோவிலில் அடிக்கடி ஐயாவை காணமுடியும். இந்த ஒரு துயரமான சம்பவம் முல்லைத்தீவு மாவட்ட மக்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அதேபோல் யாழ்ப்பாணத்திலும் பல கோவில்களில் ஐயாவை காணமுடியும்.

எதிர்பாராத விதமாக விஷயந்து தீண்டியதில் யாழ்ப்பாண வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் (02) உயிரிழந்துள்ளார்.

அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்னாரின் பூதவுடல் 49, யாழ் செம்மணி வீதி நாயன்மார்கட்டு குரு பீடாதிபதி வாஸஸ்தலத்தில் இன்று 03.04.2025 வியாழக்கிழமை மாலை முதல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மறுநாள் 04.04.2025 வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு இறுதி கிரியைகள் இடம்பெற்று, ந.ப 1 மணியளவில் தகனகிரியைக்காக செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும் என்பதனை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி அறியத்தருகின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here