கொட்டாவை – மஹல்வராவ, மாலம்பே வீதி மற்றும் ருக்மலை வீதி ஆகிய பகுதிகளில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த நான்கு விபச்சார விடுதிகளிலிருந்து 16 பெண்கள் உட்பட 20 பேர் கொட்டாவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொட்டாவை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் நான்கு விபச்சார விடுதிகளின் உரிமையாளர்களும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காலி, மாத்தறை மற்றும் பெலியத்தை, வலஸ்முல்ல, அநுராதபுரம் , இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டி, கேகாலை, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 18 முதல் 46 வயதுடைய 16 பெண்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.