கள்ளகாதலனுடன் சேர்ந்து கணவனை போட்டுத்தள்ளிய பெண் யூடியூபர்.. பகீர் சம்பவம்.!

0
77

யூடியூபர் ஒருவர் நண்பருடன் சேர்ந்து கணவரை கொன்று சாக்கடையில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலத்தில் ரவீனா என்ற பெண்ணுக்கும் பிரவீன் என்ற இளைஞருக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 6 வயதில் மகன் இருக்கிறார்.

ரவீனா கடந்த சில ஆண்டுகளாக யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்தார். ஆனால் அவர் வீடியோக்களை பதிவேற்றம் செய்வது குறித்து, பிரவீனுக்கும் அவருக்கும் அவ்வப்போது சண்டை வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுரேஷ் என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகியுள்ளார் ரவீனா. ஒரு கட்டத்திற்கு பிறகு, இருவரும் இணைந்து இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்தனர். இவர்கள் இருவரும் வீடியோ பதிவேற்றுவது பிரவீனுக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த மார்ச் 25ஆம் தேதி பிரவீன் வீட்டிற்கு வந்தபோது, சுரேஷும் ரவீனாவும் தகாத முறையில் இருப்பதைப்பார்த்துள்ளார். இதையடுத்து அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த இரவு ரவீனா சுரேஷுடன் இணைந்து, தனது துப்பட்டாவை வைத்து பிரவீனை கொலை செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் அவர்கள் இருவரும் இணைந்து, பிரவீனின் உடலை எடுத்து சென்று ஒரு சாக்கடையில் வீசியுள்ளனர். சில நாட்களாக பிரவீன் காணவில்லை என்று பிரவீனின் குடும்பத்தினர் அவர் குறித்து விசாரித்தபோது, தனக்கு எதுவும் தெரியவில்லை என்று ரவீனா கூறிவந்துள்ளார்.

சந்தேகமடைந்த பிரவீனின் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து 3 நாட்களுக்கு பிறகு, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததையடுத்து, போலீசார் பிரவீனின் உடலை அழுகிய நிலையில் கண்டெடுத்துள்ளனர்.

இதையடுத்து ரவீனாவை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் சுரேஷ் தலைமறைவாக உள்ளதாகவும், அவரை விரைவில் கைது செய்வோம் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். திருமணத்தை மீறிய உறவால், கணவரை கொன்று யூடியூபர் ஒருவர் சாக்கடையில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.