உணவகம் ஒன்றில் சாப்பிடச் சென்ற குடும்பத்திற்கும், உணவக ஊழியர்களுக்கும் இடையே அடிபுடி…! Video

0
60

உணவு ஓர்டர் செய்துவிட்டு காத்திருந்த குடும்பத்தை தாறுமாறாக தாக்கிய சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய (16) தினம் பெண்கள், குழந்தைகள் உட்பட சில குடும்ப உறுப்பினர்கள் விடுமுறைக்காக கொழும்பில் இருந்து காலி சென்று, இரவு உணவிற்காக ஒரு பிரபலமான ஹோட்டலுக்கு சென்றுள்ளனர்.

தமது குடும்பத்திற்கு தேவையான உணவுகளை ஓர்டர் செய்துவிட்டு உண்பதற்காக காத்திருந்தனர்.

எனினும் சுமார் 30 நிமிடங்களுக்குப் பின்னர் ஹோட்டல் ஸ்டீவர்ட் வந்து, உணவு தீர்ந்து விட்டது, அதனால் உங்களுக்கான உணவு பரிமாறமுடியாது என்று உணவாக ஊழியர்கள் தெரிவித்ததாக கூறப்படுகின்றது.

அதன் பின்னர் இருவருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளதாக கூறப்படுகின்றது,

எதிர்பாராத இந்த அசம்பாவிதம் காரணமாக 28 வயது இளைஞருக்கு தலையில் காயம் ஏற்பட்டு, 17 வயது சிறுவனுக்கு கண்ணில் காயம் மற்றும் உடலில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டது, மேலும் 14 வயது சிறுவன் ஒருவனுக்கும் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் காலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளோம். எனினும் தமக்கு உரிய நியாயம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்ற பாதிக்கப்பட்ட குடும்பம் கூறியுள்ளது.

குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. (FB)