யாழில் நடந்த சோகம்.. குளத்தில் மூழ்கி உயிரிழந்த இளைஞன்.. செய்திகேட்டு உயிரை மாய்த்த காதலி.!

0
130

யாழ். வரணி சிட்டிவேரம் பகுதியில் உள்ள குளம் ஒன்றில் நீராடிய இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் உயிரிழந்த செய்தி கேட்டு அவரது காதலியும் உயிர்மாய்த்துள்ளார்.

தவசிக்குளம் கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த சிவராசு சிலுசன் (வயது-23) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மற்றும் வரணி பகுதியை சேர்ந்த 18 வயதான யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞன் தொடர்பில் தெரியவருகையில்..

நேற்று வியாழக்கிழமை (17) புதுவருட கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சுமார் எட்டுப் பேர் அடங்கிய நண்பர்கள் சிட்டிவேரம் பகுதியில் உள்ள குளம் ஒன்றில் நீராடிய போது குறித்த இளைஞர் தாமரைக் கொடியில் சிக்குண்ட நிலையில் மீட்கப்பட்டு வரணி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்துள்ளார்.

சடலம் மரண விசாரணைக்காகவும் பிரேத பரிசோதனைக்காகவும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இளைஞனின் மரண செய்தியை அறிந்த 18 வயதான காதலி இன்று (18) அதிகாலை வீட்டில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். வரணி பகுதியை சேர்ந்த 18 வயதான யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.