இரு சகோதரர்கள் சண்டை பிடித்து, படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதியானதுடன் 10 இலட்சம் பெறுமதியான மோட்டார் சைக்கிளும் தீக்கிரையானது.
இச்சம்பவம் நேற்று (17) மாலை 6 மணிக்கு ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை பகுதியில் உள்ள சுரங்கத்தை அன்டிய பகுதியில் இடம் பெற்றுள்ளது.
இது குறித்து திம்புள்ள பத்தனை பொலிஸார் கருத்து தெரிவிக்கையில், இரு சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய் தர்க்கம் சண்டையில் முடிந்து இருவரும் படுகாயங்களுடன் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றனர். (video-fb)