கிளிநொச்சியில் நடந்த சோகம்.. தந்தை செலுத்திய டிப்பரில் சில்லுக்குள் சிக்கி ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு.!

0
65

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பாள்குளம் பகுதியில் தந்தை செலுத்திய டிப்பரில் சிக்கி ஒன்றரை வயது ஆண் குழந்தை ஒன்று உடல் நசுங்கி உயிரிழந்துள்ளது.

இத் துயர சம்பவம் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.

தவக்குமார் சிந்துஜன் எனும் ஒன்றரை வயது நிரம்பிய பச்சிளம் பாலகனே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

தந்தை டிப்பர் வாகனத்தை பின்புறம் செலுத்தியபொழுது, விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மீது டிப்பர் மோதியதன் காரணமாக குழந்தை உடல் நசுங்கி பலியானார்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.