பாணந்துறை கடற்கரைக்கு நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் கடலில் குளிக்க சென்ற இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கிய பரிதாப சம்பவம் பதிவாகியுள்ளது.
பாணந்துறை கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த போது நேற்றுமுன் மாலை 5.30 மணியளவில் 5 அலையில் அடித்துச் செல்லப்பட்டனர்.
அந்த நேரத்தில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பாணந்துறை கடலோர காவல்படை மற்றும் காவல்துறை உயிர்காக்கும் குழுக்கள் மூன்று பேரை மீட்டனர், மீதமுள்ள இரண்டு சிறுவர்களும் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
கொழும்பு #வத்தளை மற்றும் பண்டாரகம அட்டுளுகம பகுதியை சேர்ந்த குடும்ப உறவுகளே இந்த அனர்த்தத்திற்கு ஆளாகினர்.
அட்டுளுகம பகுதியை சேர்ந்த 15 வயதுடைய மொஹமட் இர்பான் மொஹமட் மற்றும் யாசிர் அரபாத் அகமது என்ற இரு மாணவர்களே காணாமல் போயுள்ளனர்.
இவர்களில் ஒருவர் இம்முறை #சாதாரண தரப் பரீட்சை எழுதவிருந்த மாணவராவார்.
ஒருவர் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டபோது, மற்றவர் அதைக் காப்பாற்ற முயன்றபோது, இருவரும் கடலில் காணாமல் போனதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார்.
இருப்பினும், கடலில் மூழ்கி காணாமல் போன இருவரினதும் உடல் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.