கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் இன்று (19) அதிகாலை பெரகும்புர – அம்பெவெல ரயில் நிலையங்களுக்கு இடையில் இடம்பெற்றுள்ளதாக பட்டிபொல பொலிஸார் தெரிவித்தனர்.
தியத்தலாவ பகுதியைச் சேர்ந்த 26 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்ததார்.
உயிரிழந்தவர் ரயில் நிலையத்தில் ரயில் கடவை பணியாளராக பணி புரிந்து வந்ததாகவும், ரயில் செல்லும் போது அவர் ரயில் தண்டவாளத்தில் படுத்து உறங்கியதும் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலம் அதே ரயிலில் ஏற்றி அம்பெவெல ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பட்டிபொல பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.