நிட்டம்புவ முதலீட்டு வலய வீதியில் இடம்பெற்ற விபத்தில் விசேட அதிரடிப்படை பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் நிட்டம்புவ, ருக்காஹவில பகுதியை சேர்ந்த 32 வயதானவர் என தெரியவந்துள்ளது.
நேற்று (18) இரவு நிட்டம்புவ முதலீட்டு வலய வீதியில் மோட்டார் சைக்கிளில் தனது வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த கான்ஸ்டபிள், நான்குவழிச் சந்திப்பில் வீதியின் இடதுபுறத்தில் உள்ள தொலைபேசி கம்பத்தில் மோதியதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நிட்டம்புவ, ரணவிருகம வீதியில் இன்று (19) காலை ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் விழுந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் நிட்டம்புவ பொலிஸாருக்கு தகவல் அளித்தனர்.
அதன்படி, அதிகாரிகள் குழு காயமடைந்த நபரை வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவர் உயிரிழந்தார்.
நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.