அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – ஜனாதிபதி..!

0
36

அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவே 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

பொலன்னறுவையில் இன்று (20) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.

2019 ஏப்ரல் மாதம் முதல் 2024 செப்டம்பர் மாதம் வரையிலான ஐந்தரை ஆண்டுகள் விசாரணைகள் என்ற போர்வையில் தாக்குதலுடன் தொடர்புடையவர்களின் தகவல்களை மறைக்கும் முயற்சிகளே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

2019ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த அரசாங்கத்திற்கோ 2019 நவம்பர் மாதம் உருவாக்கப்பட்ட அரசாங்கத்திற்கோ இந்த தாக்குதலுடன் தொடர்புடைய சூத்திரதாரிகளை சட்டத்தின் முன்கொண்டுவருவதற்கான நோக்கம் இருக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

அந்த அரசாங்கங்களுக்கு உண்மையான சூத்திரதாரிகளை மறைக்க வேண்டிய தேவையே காணப்பட்டதாகவும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கூறினார்.

தாக்குதல் இடம்பெற்று 6 வருடங்கள் கடந்துள்ள நிலையில் தாம் ஆட்சிக்கு வந்து 6 மாதங்களே ஆகியுள்ள போதிலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய மற்றும் பொறுப்புக்கூறவேண்டியவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

21/4 தாக்குதல்கள் தொடர்பான அறிக்கையை CIDயிடம் ஒப்படைத்த ஜனாதிபதி.!