சுற்றுலா விடுதியில் வெட்டு காயங்களுடன் சடலம் ஒன்று மீட்ப்பு.!

0
8

மொனராகலை, கதிர்காமம், சித்துல்பவ்வ வீதியில் உள்ள சுற்றுலா விடுதியிலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சுற்றுலா விடுதியில் பணியாளராக கடமையாற்றியவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் இரண்டு நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் எனவும் சடலத்தில் பல வெட்டு காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது கொலையாக இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த சுற்றுலா விடுதியின் உரிமையாளர் கொழும்பு பிரதேசத்தில் வசிப்பதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணகைளை கதிர்காமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.