கிளிநொச்சி – மருதநகர் பகுதியில் 20.04.2025 அன்று சுமார் 3.30 மணியளவில், 59 பரசுராமன் பரமேஸ்வரி வயதுடைய பெண்ணேருவர் தனது வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது, எரிவாயு சிலிண்டர் கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அணிந்திருந்த ஆடையில் தீப்பற்றி. பலத்த காயங்களுடன் அவர் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 22.04.2025 இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றன.