முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பாலத்தின் புனரமைப்பிற்கான ஆரம்ப கட்டவேலைக்கான பூர்வாங்க நடவடிக்கைகள் 22.04.2025 நேற்று தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் நெடுஞ்சாலைகள் போக்குவரத்து சிவில் விமானச்சேவை அமைச்சர் சுனில் ரத்தினாயக்கா அவர்கள் மற்றும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் மற்றும் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் களவியயம் மேற்கொண்டு வட்டுவாகல் பாலம் புனரமைப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்கள்.
வட்டுவாகல் பாலத்தினை அமைப்பதற்கான வரைபடம் உள்ளிட்ட அனைத்து வேலைகளும் முடிவடைந்துள்ள எதிர்வரும் யூன்மாதம் அளவில் பாலம் புனரமைப்பிற்கான ஒப்பந்தந்த தாரர்களுக்கான கோரல் விடுக்கப்படவுள்ளது.
அதன் பின்னர் ஓகஸ்ட் மாதம் அளவில் கட்டுமானப்பணிகள் தொடங்கி 2026 ஆம் ஆண்டு இறுதி பகுதிக்குள் இந்த வேலைத்திட்டத்தினை முடித்தவைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வன்னி நாடாளுமன்ற றுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்த பாலத்தின் மாதிரி படம் பல்வேறு தோற்ற அமைப்புக்களுடன் உருவாக்கப்படவுள்ளது அகலமான பாலமாகவும் கலைநயம் படைத்த கலாச்சார விழுமியங்களை உள்ளடக்கக்கூடிய விடையங்களையும் பொழுதுபோக்கு அம்சங்களை உள்ளடக்கிய மாதிரி இடங்களும் கடற்தொழிலை மையாமாக கொண்ட தொழிலாளர்களுக்கு அவர்களின் பொருட்களை விற்பனை செய்யக்கூடிய இடமாகவும் இது அமையவுள்ளது
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீண்டகால திட்டமிடலில் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தினை சுற்றுலா மையமாக மாற்றுவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது எதிர்வரும் காலத்தில் சாலை மற்றும் கொக்குளாய் பாலத்தினையும் பூர்த்தி செய்வதற்கான திட்டங்கள் உள்ளன அடுத்த 5 ஆண்டுகளில் இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
ஏனைய மக்களிடம் காணப்படும் காணிப்பிரச்சனை குறிப்பாக எல்லைப்பிரச்சினைகளை தீர்த்துவைப்பதற்கு காணிஅமைச்சரிடம் பேச்சுக்களை மேற்கொண்டுள்ளோம் இராணுவத்திடம் காணப்படும் நிலங்களை விடுவிக்கவுள்ளோம் கேப்பாபிலவு பகுதியில் இராணுவத்திடம் காணப்படும் நிலத்தினை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அவர்தெரிவித்துள்ளார்.