தவறான முடிவெடுத்து வீட்டுக் கிணற்றில் குதித்து ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் அம்பலவாணர் வீதி, ஆத்தியடி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சபாரத்தினம் விஜயலட்சுமி (வயது-79) என்பவராவார்.
மேற்படி பெண் கிணற்றில் சடலமாக காணப்பட்டதை அடுத்து சம்பவம் இடத்திற்கு நேற்று செவ்வாய்க் கிழமை சென்ற யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.
சாட்சிகளை யாழ்ப்பாண பொலிஸார் நெறிப்படுத்தினர்.