நண்பியுடன் குளிக்கச் சென்ற 12 வயது சிறுமி நீரில் மூழ்கி உயிரிழப்பு.!

0
33

ஒலுவில் கடற்கரையில் நீராடச்சென்ற, ஒலுவில் 04 ம் பிரிவைச் சேர்ந்த, 12 வயது எவ்.பாத்திமா ஹிக்மா நீரில் மூழ்கி இறந்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு அருகாமையில் உள்ள கடற்கரையில் செவ்வாய்க்கிழமை (22) மாலை நண்பி ஒருவருடன் குளிக்கச் சென்ற போதே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

மரணம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

நீரில் இருந்து மீட்கப்பட்ட மற்ற சிறுமி அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.