மித்தெனிய முக்கொலை சம்பவம் – விமான நிலையத்தில் கைதான சந்தேகநபர்.!

0
39

மித்தெனியவில் அனுர விதானகமகே (கஜ்ஜா) மற்றும் அவரது இரண்டு பிள்ளைகளை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் இன்று (25) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தின் போது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றதாக தெரிவிக்கப்படும் சந்தேக நபரே இன்று (25) காலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் இந்தியாவில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டிருந்த நிலையில், குற்றப் புலனாய்வு பிரிவினரால் விமான நிலையத்தில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குலசிங் லியனகே பெமல் இந்திக்க என்ற வீரகெட்டிய பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி இரவு மித்தெனிய பொலிஸ் பிரிவின் கடேவத்த சந்திக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை (கஜ்ஜா), மகன் மற்றும் மகள் கொல்லப்பட்டனர்.