சினிமாவை மிஞ்சும் கொடூரம் – கொ.லை.யி.ல் முடிந்த கள்ளக்காதல் விவகாரம்..!

0
25

இந்தியாவின் தெலங்கானாவில் இளைஞரை கொலை செய்து பாழடைத்த கிணற்றில் வீசிய வழக்கில், காவலர் உட்பட 6 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெலங்கானா மாநிலம் ஹனுமகொண்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சீனிவாஸ். இவர், வாரங்கல் மாவட்டத்தில் உள்ள வெங்கடாபுரம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த நிர்மலா என்பவருடன் திருமண பந்தத்தை மீறிய உறவில் இருந்துள்ளார். இதை அறிந்த சாய் பிரகாஷ் என்ற இளைஞர், தனது சித்தி நிர்மலாவை கண்டித்துள்ளார். ஆனால், சீனிவாஸ் காவலர் என்பதால், உயர் அதிகாரிகளிடம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் புகார் அளித்துள்ளார்.

அதன்பேரில் விசாரணை நடத்திய உயரதிகாரிகள், காவலர் சீனிவாசை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டனர். பின்னர், டிசம்பர் மாதம் சீனிவாஸ் மீண்டும் பணியில் சேர்ந்ததும், தன் மீதான நடவடிக்கைக்கு காரணமான சாய் பிரகாஷை தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளார். அதன்படி சரியான சமயத்திற்காக காத்திருந்த நிலையில், கடந்த 15 ஆம் தேதி சாய் பிரகாஷ், காவலர் சீனிவாசின் சொந்த ஊரான ஹனுமகொண்டாவுக்கு காரில் சென்றுள்ளார். இந்த தகவலை, அவரின் சித்தி நிர்மாலா, தனது ரகசிய காதலன் சீனிவாசுக்கு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கூலிப்படையினர் 4 பேருடன் காத்திருந்த சீனிவாஸ், காருடன் இளைஞரை கடத்தியுள்ளார். அப்போது, சாய் பிரகாசை கடுமையாக தாக்கி, சால்வையால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். அதே காரில் உடலை ஹசினாபாத் கொண்டு சென்று, அங்குள்ள பாழடைந்த கிணற்றிவில் வீசிவிட்டு தப்பியோடியுள்ளனர். மூன்று நாட்கள் கழித்து சாய் பிரகாஷை, காணவில்லை என குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சந்தேகத்தின்பேரில் காவலர் சீனிவாஸை பிடித்து விசாரித்தனர். அதில், தனது ரகசிய காதலுக்கு தடையாக இருந்ததுடன், பணி இடைநீக்கம் செய்ய காரணமாக இருந்த கோபத்தில் கூலிப்படையை பயன்படுத்தி சாய் பிரகாஷை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து, சீனிவாஸ், நிர்மலா மற்றும் கூலிப்படையை சேர்ந்தவர்கள் உட்பட ஆறு பேரையும் கைது செய்துள்ளனர்.

பின்னர், அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், செல்போன்கள், கொலைக்கு பயன்படுத்திய கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். ரகசிய காதலை உயரதிகாரிகளிடம் போட்டுக் கொடுத்த இளைஞரை, காவலரே கூலிப்படையை ஏவி கொலை செய்த சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.