காலி தேசிய வைத்தியசாலையில் ஏழு வயது பாடசாலை மாணவன் இன்று (27) நீர் வெறுப்பு நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவன் கடந்த 24 ஆம் திகதி சுகவீனம் காரணமாக காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த மாதம் வீட்டில் வளர்த்து வந்த நாய் மாணவரின் பிறப்புறுப்பு பகுதியை கடித்துள்ளதாகவும், பின்னர் மாணவன் இது குறித்து வீட்டாரிடம் எதுவும் கூறாமல், கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் மாணவனின் உடல்நிலை மோசமடைந்ததை் தொடர்ந்து, சிகிச்சைக்காக காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
காலி தேசிய வைத்தியசாலையில் இன்று (27) பிரேத பரிசோதனை நடத்தப்பட்ட பின்னர் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.