துபாயிலிருந்து கட்டுநாயக்க வந்த வர்த்தகர் கைது..!

0
1

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒரு கோடி 25 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய வர்த்தகரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது…

சந்தேக நபர் துபாயிலிருந்து இன்றையதினம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

அதிகாலை துபாயிலிருந்து நாட்டுக்கு வருகை தந்த குறித்த சந்தேகநபரிடமிருந்து 8 பொதிகளில் 83,600 சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.