சீன வெடியைக் கடித்துப் பார்த்த பெண் வைத்தியருக்கு நேர்ந்த சோகம்.!

0
39

சீனப் பட்டாசு ஒன்றை கடித்த பெண் பல் வைத்தியர் ஒருவர் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் பாணந்துறையின் வேகட பகுதியில் உள்ள அரச வைத்தியசாலையில் பணிபுரியும் பல் வைத்தியர் என பொலிசார் தெரிவித்தனர்.

காயமடைந்த வைத்தியரின் மகன் அருகிலுள்ள ஒரு கடையில் இருந்து சீனப் பட்டாசுகளை வாங்கி, அவற்றில் சிலவற்றை வீட்டின் வரவேற்பறையில் உள்ள மேசையில் வைத்திருந்துள்ளான்.

இது தொடர்பில் சரியான புரிதல் இல்லாமல், பல் வைத்தியர் அதை பரிசோதிக்க தனது பற்களால் கடித்ததாகவும், இதனால் அது வெடித்து பலத்த காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

‘சீனப் பட்டாசு’ அவரது வாயில் வெடித்ததால், அவரது வாய், முகம் மற்றும் பற்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

படுகாயமடைந்த வைத்தியர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பாணந்துறை பிரதேச குற்றப்பிரிவு அதிகாரிகள் வெடிப்பு நிகழ்ந்த வீட்டிற்குச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

அதே நேரத்தில் பாணந்துறை தெற்கு தலைமையக பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.